வவுனியா புளியங்குளத்தில் சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் பண மோசடி : RTI மூலம் தகவல் கோரல்

வவுனியா புளிங்குளத்தில் வவுனியா வடக்கு பிரதேச செலயகத்தினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பல உத்தியோகத்தர்கள் வீட்டுத்திட்டப்பணத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012,2013,2014,2015 ஆகிய காலப்பகுதியில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வெள்ள நிவராணம் இடர் முகாமைத்துவ பிரிவினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தில் பண மோசடி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகம் குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

எனினும் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை. இதையடுத்து குறித்த உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது குறித்த உத்தியோகத்தர்கள் வேறுபிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீதான விசாரணகள் இடம்பெற்றுள்ளதா? என கேட்டே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தினூடாக வவுனியா வடக்கு பிரதேச செலயகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட மோசடி, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மின்னஞ்சல் ஊடாக கோரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டு 14நாட்களுக்குள் குறித்த தகவலுக்கு பதில் வழங்கப்படவேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like