வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை : மூவர் பொலிஸாரால் மீட்பு

வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம்(29/06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தரணிக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஈஸ்வரன் தர்சா என்பவர் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு காணாமல் போயுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு இடப்பட்டுள்ளது. அத்துடன் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரும் காணவில்லை என ஈச்சங்குளம் பொலிஸாரிடம் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மாணவி தொடர்பான விசாரனைகளை ஈச்சங்குளம் பொலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

இன்று மூவர் மீட்பு

இதேவேளை நேற்றைய தினம் காணாமல் போனதாக முறைப்பாடிடப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று திருகோணமலை கடற்கரை பகுதியில் வைத்து திருகோணமலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாமாகவே யாருக்கும் தெரியாமல் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம்,கட்டையர்குளம்,மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய ஜீவசங்கர்,வினித்,அட்சயன் எனும் மூன்று மாணவர்களே குறிப்பிட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like