வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்தமருத்துவ ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகள் வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பீடத்தில் நடைபெற்றது.

சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்ற இரண்டுவார கால பயிற்சிப்பட்டறையில் சித்தமருத்துவ துறை மாணவர்கள், சுதேச மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சித்தமருத்துவர்களிடையே அருகிவரும் ஏடுவாசிக்கும் பழக்கத்தை முன்னேற்றும் வகையில் இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து ஏடுவாசிப்பதில் சிறப்புத்தேர்ச்சியுடைய பயிற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு இந்த பயிற்சிப்பட்டறை வழங்கப்பட்டது.

இறுதிநாள் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கலந்துகொண்டு பயிற்றுனர்களுக்கு கௌரவிப்பை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் மற்றும் மாகாண சுதேச மருத்துத்திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி துரைரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You might also like