வித்தியா கொலையில் சந்தேகநபரான சுவிட்ஸர்லாந்து பிரஜையின் உண்மை முகம் அம்பலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுவிட்ஸர்லாந்து பிரஜை குறித்து புதிய செய்திகள் வெளியாகி உள்ளன.

குறித்த நபர் சுவிட்ஸர்லாந்து பிரஜை என வெளியான தகவல் பொய் என இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்ஸர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் சுவிட்ஸர்லாந்து பிரஜை அல்ல எனவும், சுவிட்ஸர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இலங்கையர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த கொலையை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கண்டிப்பதாகவும், இலங்கை தம்மிடம் சட்ட உதவி கோரினால் அதனை வழங்க தயார் எனவும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

thanks – newsfirst

You might also like