கிளிநொச்சியில் மாணவியை தாக்கிய கல்வி நிர்வாகி கைது!

கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்விநிலையத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாகநிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்வி நிலையத்தில் தரம் 11ல் கல்விகற்கும் மாணவி ஒருவரை கல்வி நிலைய நிர்வாகி ஒருவர் நேற்று(12)தாக்கியதாகவும்,தாக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று(12) பிற்பகல் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்பெண்கள் சிறுவர்பிரவில் முறைப்பாடு கிடைத்ததாகவும் தொடர்ந்து கல்விநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின் போது நிர்வாகி ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும்குறித்த சந்தேக நபரை இன்று(13) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like