​வவுனியா கோவில்புதுக்குளத்தில் கோஸ்டி மோதல்! ஒருவர் படுகாயம்

வவுனியா கோவில்புதுக்குளத்தில் நேற்று 30-06 இரவு 11.00 மணிக்கு நடைபெற்ற கோஸ்டி மோதலொன்றின்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் எஸ்.ரஜீவ்காந் (சூப்பி) வயது 32 எனும் குடும்பஸ்தரே கை,கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

கோவில்புதுக்குளம் சந்தியில் நின்ற இரண்டு பேருக்கும் வீதியில் பயணித்த இருவருக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் குறிப்பிட்ட நபர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது

இச்சம்பவம் குறித்து வவுனியா தமிழ்மொழிமூல அவசர பொலிஸ் சேவைக்கு (0766224949) தகவல் வழங்கியபோதும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருக்கவில்லை என்பதுடன் வவுனியாவில் தமிழில் அழைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் இலங்கையில் செயற்படும் ஒரேயொரு தமிழ் மொழிமூல பொலிஸ் அவசர சேவை என விளம்பரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like