வவுனியா கூமாங்குளத்தில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வுகள்

கூமாங்குளம் சித்திவிநாயகர் ஆலய அறநெறி பாடசாலையில் இன்று (02.07.2017) காலை 9.30மணியளவில் மாணிக்க வாசகர் குரு பூசை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாணிக்கவாசகர் திரு உருவ படத்திற்கு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கு சைவ சமய புத்தகங்களும் வழங்கப்பட்டன

திருமதி அன்னம்மா சிறபப்பலம் அறக்கட்டளை அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலய தலைவர் திரு ந. ஆறுமுகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் மா. சுரேந்திரன் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந. கிருஷ்ணமூர்த்தி, அஸ்திரம் இளைஞர் கழக தலைவரும் அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளை இணைப்பாளருமாகிய நா.ஸ்ரீதரன் மற்றும் அறநெறி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like