வவுனியாவில் மரதன் ஓட்டத்தின் போது மயங்கி விழுந்த மாணவன்!

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மாணவன் ஓட்டத்தை நிறைவு செய்த போது மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி முன்பாக ஆரம்பித்த இம் மரதன் ஓட்டம் மடுகந்தை வரை சென்று மீண்டும் பாடசாலை முன்பாக வந்து நிறைவடைந்தது.

இதன்போதே போட்டியில் பங்குபற்றிய மாணவன் ஒருவன் முடிவிடத்தை அடைந்த போது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அம் மாணவனுக்கு முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டது.

நிகழ்வினை பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆசிரியருமான கே.நிரஞ்சன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளரான எஸ்.தவச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

கல்லூரியின் மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களான கே.நிசாந்தன், கே. நிசோபன் மற்றும் இ.கிரிதரன் ஆகியோருக்கான வெற்றி கேடயங்களை கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் வழங்கி வைத்தார்.

மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்ற பெண்களுக்கான பிரிவில் எஸ்.தினோதியா, சா.சானுஜா மற்றும் எஸ்.சரணியா ஆகியோருக்கான வெற்றி கேடயத்தை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. பி.உதயசேகரம் வழங்கி வைத்தார்.

ஆண்கள் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like