கிளிநொச்சியில் கரையோர பகுதியில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நெருக்கடி

கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் 3,389 மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது,

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எழுபது வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள குடும்பங்களில் மீன் பிடியை வாழ்வாதாரமாக கொண்ட 4,205 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதில் தற்போது கரைச்சி, கண்டாவளை, பச்சலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோமீற்றர் கரையோர பகுதிகளில் 3,389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் தொழில் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுகிறது.

கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாவட்டத்தில் உள்ள நன்னீர் குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வரும் 750 வரையான குடும்பங்களும் தற்போது நிலவும் வறட்சியின காரணமாக குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்து உள்ளமையால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like