குடிநீர் தட்டுப்பாடு! சிரமங்களை எதிர்கொள்ளும் பூநகரி மக்கள்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது என்றும், தமக்கான குடிநீரைப்பெற்றுக் கொள்வதில் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய குடிநீர் நெருக்கடி நிலவும் பகுதியாக பூநகரிபிரதேசம் காணப்படுகின்றது.

பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேறியுள்ள 7500இற்கும் மேற்பட்ட குடும்பங்களில் 10 கிராமஅலுவலர் பிரிவுகளில் வாழும் சுமார் 3700 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அத்துடன் ஒன்பது பாடசாலைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் மறவன் குறிச்சி, கொல்லக்குறிச்சி, இராமலிங்கம் வீதி, பரமன்கிராய்கறுக்காய் தீவு, செட்டியகுறிச்சி, ஞானிமடம், சித்தங்கேணி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் போதிய குடிநீர்வசதிகள் கிடைப்பதில்லை என்றும் இதனால் தமக்கான குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

You might also like