கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெட்டப்படும் பனை மரங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிகளில் தினமும் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பனை வளம் அருகி வருகின்றது என்றும் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் தினமும் பெருமளவான பனை மரங்கள் வெட்டப்பட்டு சில அதிகாரிகளின் துணையுடனும் பொலிசாரின் துணையுடனும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அத்துடன் பளைப்பகுதியில் இயங்கும் பனை மரக்காலைகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்களே விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோன்று பூநகரிப் பிரதேசத்திலும் இவ்வாறு பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.

அத்துடன் சில அதிகாரிகளினதும் பொலிசாரின் துணையுடனும் இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்கள் கடத்தப்படுகின்றன எனவும் அப்பகுதி பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு பெருமளவான பனை மரங்கள் தினமும் வெட்டப்பட்டு சில அதிகாரிகளினதும், பொலிசாரினதும் துணையுடன் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like