சற்று முன் வவுனியா குருமன்காட்டில் தொட்டியிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

வவுனியா திருநாவற்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரவூர்தி தரிப்பிடத்தில் இன்று (03.07.2017) மதியம் 1.30மணியளவில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசரட்ணம் அரியரட்ணம் (வயது 53) இன்று (03.07.2017) மதியம் 1.30மணியளவில்  பார ஊர்தி தரிப்பிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் வவுனியா பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like