கிளிநொச்சியில் மூக்கு கண்ணாடி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் பேலியகொட லயன்ஸ் கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் மூக்கு கண்ணாடி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு தாமரை தடாக மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அத்துடன், 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 350 பொது மக்களுக்கு மூக்கு கண்ணாடியும், மூன்று பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பேலியகொட லயன்ஸ் கழக தலைவா் லயன் திலக் பெர்ணாட்டோ, மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like