அரசாங்க வேலை கிடைத்தும் சாதிக்க பல்கலை சென்ற மாணவி பலி – சோகமயமானது கிராமம்

டெங்கு நோய் தொற்றினால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவமானது அவரின் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த மாணவியின் இறுதி பயண நிகழவுகள் இன்று நடைபெற்றது. இதன்போது கிராம மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.

நிர்மலா சேதனி அபேகோண் என்ற 27 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு கிராம உத்தியோகத்தர் பதவி கிடைத்த போதும், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற வேண்டும் என்ற கனவோ சென்றார்.

எனினும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

நாஉல ஸ்ரீ நாக தேசிய பாடசாலையில் ஆரம்ப கற்கைகளை நிறைவு செய்த நிர்மலா 2013ஆம் ஆண்டு உயர்தரத்தில் விசேட சித்தி பெற்று மாத்தளை மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

விண்ணப்பித்த கிராம சேவகர் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் தங்கள் கிராமத்தில் கிராம சேவகராக நியமிக்கப்பட்ட போது, இந்த பதவியை வேறு ஒருவருக்கு வழங்குங்கள் எனக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்ல விருப்பமாக உள்ளதென கூறிவிட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2015ஆம் டிசம்பர் மாதம் இணைத்துள்ளார்.

அமைதியை மாத்திரம் விரும்பும் அவரின் நேர்மையான தன்மையை பலர் விரும்பியுள்ளனர். நிர்மலா மற்றவர்களின் மகிழ்ச்சி குறித்து எதிர்பார்க்கும் ஒருவர் என அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு அவரது தந்தை வாகன விபத்தில் உயிரிழக்கும் போதும் அம்மா மற்றும் அண்ணாவுடன் வாழ ஆரம்பித்த நிர்மலா யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

பட்டம் பெறும் கனவில் வாழ்ந்த நிர்மலா அதற்கு முன்னரே உயிரிழந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

You might also like