கனகராயன்குளத்தில் வெடிக்காத நிலையில் 4 மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பகுதியில் காட்டுக்குள் இருந்து வெடிக்காத நிலையில் 4மோட்டார் குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கனகராஜன்குளம் மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காகச் சென்றவர்கள் இன்று (04.07) காலை அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 4 மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like