கிளிநொச்சி விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ.9 வீதியின் அன்னை இல்ல சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து ஒரே திசையில் இரு மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட சைக்கிளுடன் பின்னாள் வந்த மோட்டார் சைக்களில் மோதியுள்ளது.

இதன்போது பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like