வவுனியாவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 22ம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், ஆசிரியர் மீது பாடசாலை மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் நடைபெற்ற சம்பவத்தினை நிரூபிக்க முடியவில்லை என்று வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு மாணவியின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பாடசாலை மட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் தற்காலிகமாக ஆசிரியரை வலய மட்ட விசாரணைகளுக்காக இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஆசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

You might also like