கண்டாவளை பிரதேச செயலக புதிய கட்டட கட்டுமானப்பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் பூநகரி, கண்டாவளை ஆகிய இரு பிரதேச செயலர் பிரிவுகளும் நிரந்தரமான கட்டிடங்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்காலிக இடங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில் பூநகரி பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான நிதியொதுக்கீடுகள் இரண்டு முறை கிடைத்தபோதும் அதற்கான இடத்தெரிவில் ஏற்பட்ட இழுபறி காரணமாக இரண்டு தடவையும் நிதி திரும்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கான இடம் புளியம்பொக்கணைச் சந்தியில் தெரிவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவையான பிரிவுகளில் உதவிகளைப் பெறக்கூடிய வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகளும் அமைக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like