வவுனியா விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் அனுசரணையில்  இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு இன்று (04.07.2017) 9.30மணி தொடக்கம் 1.30மணி வரை நடைபெற்றது.

இவ் செயலமர்வில் பிரபல ஆசிரியர்களான S. குணசீலன் ( உயிரியல்) , P. T, விஜேந்திரன் (இணைந்த  கணிதம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இவ் செயலமர்விற்கு நிதி உதவியினை விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்ற செல்வி கலீபா (2008 Bio)அவர்கள் வழங்கியிருந்தமையுடன் இவ்செயலமர்வில் 60 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இவ் செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிகவும் சிறந்த ஆலோசனையாகவும் வழிகாட்டலுமாக இருந்ததாக தெரிவித்தனர்.

You might also like