வவுனியா நொச்சிமோட்டை புகையிரதக்கடவையில் ஊழியர் பணிக்கு இல்லை : பொதுமக்கள் விசனம்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவைக்கு ஊழியர் இன்மை காரணமாக அதனைக்கடந்த செல்லும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் பெரும் அசோகரியத்திற்குட்பட வேண்டியுள்ளது.

புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால் மாணவர்களும் புகையிரதக்கடவையைக்கடந்தே செல்லவேண்டிய நிலையில் உள்ளது.

முன்னர் அப்பகுதியிலிருந்த தற்காலிக பணியாளர்கள் கடமையிலிருந்து விலகியதையடுத்து சிறிது காலம் அப்பகுதியில் பொலிசார் கடமையில் இருந்துள்ளனர்.

தற்போது கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள புகையிரதக்கடவையில் பணிக்கு எவரும் இல்லை. இதன் காரணமாக புகையிரதக்கடவையைக்கடந்த செல்வதில் அச்சத்தினை எதிர்கொண்டுள்ள அப்பிரதேச மக்கள் தமது புகையிரதக்கடவைக்கு பணியாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியுள்ளனர்.

தற்போது புகையிரதக்கடவை பணியாளர் தங்கியிருக்கும் கொட்டில் சரிந்து வீழ்ந்துள்ளமையும் புகையிரதக்கடவை பாதுகாப்பிற்கும் போடப்பட்ட தடை கம்பியும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அதையே சீரமைத்த பணியாளரை நியமித்த தருமாறும் பாடசாலை மாணவர்களும் கோரியுள்ளனர்.

You might also like