வவுனியா சமுதாய அடிப்படை வங்கி முறைகேடு தொடர்பாக 82பேர் முறைப்பாடு

வவுனியாவிலுள்ள சமுதாய அடிப்படை வங்கியின் செயற்பாடுகளில் வழங்கப்படும் கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் சமுதாய அடிப்படை வங்கியின் சுற்றுநிருபம் ஊடாக செயற்றிட்டம் இடம்பெறுவதில்லை என்று தெரிவித்தும் சமுர்த்தி திணைக்களத்தின் சுற்று நிருபத்தினைப்பெறுவதற்கு இரண்டு கிராம  மக்கள் 82பேர் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் சமுதாய அடிப்படை வங்கியினால் வழங்கப்பட்டு வரும் சமுர்த்திக் கொடுப்பனவு சீரான முறையில் வழங்கப்படுவதில்லை. இது பல கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் குளறுபாடிகளுடனே இடம்பெற்று வருகின்றது. பொதுமக்கள் பல தடவைகள் உயர் அதிகாரிகளிடம் சென்று விளக்கம் கோரினாலும் சரியான பதில் பொது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இதையடுத்தே தற்போது கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமான தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் கோரும் உரிமையில் விண்ணப்பித்துள்ளனர்.

பொதுமக்களால் கோரப்படும் விண்ணப்பதற்திற்கு 14நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும் என்பது தெரிந்ததே

You might also like