வவுனியாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விலங்கு உயிரிழப்பு

வவுனியா – ஶ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மீட்கப்பட்ட நீர் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த நீர் நாய் நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி கிராம அலுவலர் மூலம் பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டு சென்றுள்ளனர்.

நீர் நாய் மீட்கப்பட்ட போது அதன் கழுத்துப் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று கடித்த காயம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இருப்பினும், வவுனியாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட குறித்த நீர் நாய் ஒரு அரியவகை விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like