மாணவி மீதான பாலியல் விவகாரம் திட்டமிட்டு இருட்டடிப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்

வவுனியாவில் கடந்த 22ஆம் திகதி பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் அதேபாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்பறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து பாடசாலை சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள உத்தியோகத்தரிடம் தகவல் கிடைத்தபோது தகவல் வழங்க மாணவி மறுத்து விட்டார்.

எனவே குறித்த ஆசிரியரின் திட்டமிட்ட செயற்பாட்டையடுத்தே இருட்டடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகின்றது. எனவே மேலதிக விசாரணைகளுக்கு மாணவியின் தரப்பிலிருந்து பொலிசாருக்கு தகவல் மேற்கொள்ளச் சென்றபோது அதைமறித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரியவருகின்றது. எனவே குறித்த சம்பவத்தை திட்டமிட்ட வகையில் இருட்டடிப்புச் செய்வதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த ஆசிரியரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றபோது குறித்த சம்பவம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

You might also like