வவுனியாவில் பொலிசாரை சுற்றி வளைத்த இளைஞர் குழு

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பொலிசார் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம், நேற்று (06) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரை உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் மது போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் ஒரு மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர். தாக்குதலின் பின்னர் பொலிசார் அப்பகுதியிலிருந்து சென்று விட்டனர்.

இது குறித்து பொலிசார் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறைப்பாடுகளும் மேற்கொள்ளவில்லை.

எனினும் ஆலயத்தில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி. கமராவில் பொலிசாருடன் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.

தற்போது இது குறித்த விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like