டெங்கு நூளம்புகளின் இருப்பிடமாக மாறிவரும் வவுனியா புதிய பஸ் நிலையம்

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கால்வாயில் நீர் தேங்கி நிற்பதானால் டெங்கு பரவும் இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஏ9 வீதியருகே காணப்படும் இப் பேரூந்து நிலையத்திற்கு அருகே விவசாய திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு தினசரி பல மக்கள் வந்து செல்லுகின்றனர். எனினும் இவ் வாய்க்காலில் பல வாரங்களாக இவ் வாய்க்காலில் காணப்படும் நீர் நிலைகளில் குப்பைகள் தேங்கி நிற்கின்றன.

கடந்த சில மாதங்களாக காச்சல் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை அசமந்தபோக்காக செயற்படுவது ஏன்? வவுனியா டெங்கு ஒழிப்பு பிரவினர் இவ் விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்?

உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு!

You might also like