பெண்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் ரயிலில் வீழ்ந்து பலி!

மின்னேரிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மின்னேரிய மஹரத்மலே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

164 ரயில் மைல்கல் அருகில் ரயிலில் மோதுண்ட குறித்த இளைஞர் அதற்கு அருகில் உள்ள பாலம் வரை இழுத்து செல்லப்பட்டு பாலத்தில் விழுந்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த இளைஞர் அதிகமாக மதுபானம் அருந்தும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று இரவு இவ்வாறு மதுபானம் அருந்திவிட்டு ரயில் பாதைக்கு வந்துள்ளார்.

இந்த நபர் இரண்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரயிலில் பாய்ந்துள்ளதாக ரயில் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

You might also like