கடலில் மிதந்த சிறுவனின் சடலம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் சுனிகர், இவர் கடந்த 3ம் திகதி தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

விசேஷ வீட்டில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சகாயசான்சோவை காணவில்லை.

எங்கும் தேடியும் அவன் கிடைக்காததால் பொலிசுக்கு புகார் அளித்தனர், குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று முட்டம் கடல் பகுதியில் சிறுவன் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரித்ததில், காணாமல் போன சகாயசான்சோ என்பது தெரியவந்தது.

உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் அளித்தனர், இறந்தது தன்னுடைய மகன் தான் என உறுதி செய்தனர்.

சிறுவனை கடத்திக் கொன்றது யார்? எதற்காக இப்படி செய்தார்கள்? முன்பகை ஏதும் காரணமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like