வவுனியாவில் கப்பம் கோரி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

வவுனியா இலுப்பையடி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் பேருந்துக்காக காத்து நின்ற பொது மக்களிடம் மது போதையில் வந்த இரு இளைஞர்கள் பலவந்தமாக பணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன்அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட நபரொருவர் மீது குறித்த இரு இளைஞர்களும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதுடன், குறிப்பிட்ட நபர் அவ்விடத்திலிருந்து தப்பி செல்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏற முயன்ற வேளை முச்சக்கர வண்டியை வழிமறித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் முறைப்பாட்டை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like