கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் மருத்துவ முகாம்!

கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் இன்று மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் லக்ஷ்மன் எல். வீரசேன தலைமையிலான மருத்துவ குழுவினர், மற்றும் கிளிநொச்சி சுகாதார வைத்திய சேவைகள் திணைக்களம், இராணுவ வைத்திய குழுவினர் இணைந்து குறித்த மருத்துவ முகாமை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது 1000ற்கு மேற்பட்ட நோயாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வெளிநோயாளர் பிரிவு, மருத்துவ பரிசோதனைகள், மலேரியா தொற்று பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

குறித்த மருத்துவ முகாமிற்கு முகாமிற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மருத்துவ குழுவினர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like