முல்லைத்தீவில் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

நாட்டில் தொடரும் கடும் வறட்சி காரணமாக வடமாகாணத்தைச் சேர்ந்த பல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கால்நடைகள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் குறிப்பிடுகையில்,

எமது மாவட்டத்தில் வெப்பநிலை அதிரித்துள்ளதன் காரணமாக மேய்ச்சல் தரைகளில் உள்ள புற்கள் கருகியுள்ளன. இந்நிலையில் பச்சைத்தரைகளை தேடி கால்நடைகள் அலைந்து திரிகின்றன.

மேலும் இந்த இடங்களில் காணப்படுகின்ற நீர்குறைந்த சில சேற்று மோட்டைகளுக்குள் சில மாடுகள் நீர் அருந்த இறங்குகின்றது. இதன்போது சேற்று மோட்டைக்குள் சிக்கிய கால்நடைகள் மீள முடியாமல் இறந்து விடுகின்ற நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக பொருளாதார ரீதியில் நாங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய கால்நடைகளை பராமரிப்பதற்கு நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like