கணவனை ஏமாற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி! பேருந்தில் நடந்த கொடூரம்

தனது மனைவி மற்றும் இன்னொரு ஆடவர் மீது கத்திக் குத்து மேற்கொண்ட நபரை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் காணப்பட்ட தகாத உறவு முறை காரணமாக கோபம் கொண்ட கணவன் இவ்வாறு நடத்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் கல்னேவ, அவுக்கன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணும் 35 வயதான திருமணமாகாத ஆணும் என தெரியவந்துள்ளது.

இப்பெண்ணின் சட்டரீதியான கணவரால் கடந்த 30ம் திகதி கல்னேவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றின் விசாரணைகளுக்காக குறித்த பெண்ணும் அவரது காதலனும் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இந்த ஜோடி கல்னேவவிலிருந்து குருணாகல் நோக்கி பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கையில், அப்பெண்ணின் சட்டரீதியான கணவர் சாலியகம பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ்ஸின் முன்பக்க கதவின் ஊடாக உள்நுழைந்து பஸ்ஸினுள் அமர்ந்திருந்த தனது மனைவியையும் அவளது காதலனையும் கூரிய ஆயுதத்தினால் சரமாரியாக வெட்டிக்காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் பெண்ணின் தலைப்பகுதியிலும் முழங்காலிலும் காயம் ஏற்பட்டதோடு அவரது காதலனுக்கு தோள்பட்டை மற்றும் கால்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் அவர்கள் பயணித்த பஸ்ஸிலேயே பொல்பிதிகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பெண்ணின் சட்டரீதியான கணவர் கல்னேவ பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பொல்பிதிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like