பயன்பாட்டிற்கு விடப்படாத மல்லாவி பொதுச்சந்தைக் கட்டடம்!

மல்லாவி நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டடத்தின் பொரும்பகுதி இதுவரையில் வியாபார நடவடிக்கைகளுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மேற்படி பொதுச்சந்தையின் கடைகளிற்காக பிரதேச சபையினால் அறவிடப்படும் வாடகைப்பணம் அதிகமாக உள்ளதால் பெருமளவான வியாபாரிகளால் அப்பணத்தினை செலுத்தமுடியாத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

எனினும் பாவனையற்றுக் காணப்படும் பொதுச்சந்தையின் மேல்தளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுவதுடன், பிரதேச சபையினால் வாடகைப் பணத்தொகையினை குறைத்து கட்டடத்தினை முழுமையான பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like