சாதாரணதர பரீட்சையில் சித்திபெறாவிட்டால் உயர்தரம் செல்வதற்கான வாய்ப்பு

சாதாரணதர பரீட்சையில் சித்திபெறாவிட்டாலும் சகல மாணவர்களுக்கும் உயர்தரம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுமென பிரதமரின் காரியாலய பிரதானியும் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மொறவக்க பரகல கணிஷ்ட வித்தியாலயத்தின் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படும், சகல மாணவர்களும் வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு செல்லக்கூடிய வகையிலும், சகல வசதிகளும் கொண்ட வகையிலான பாடசாலைகளை அமைக்க தங்களது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது” என கூறினார்.

இந்நிகழ்வில் மொறவக்க கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் தம்மிக்கா மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like