இலங்கை போக்குவரத்து சபையினால் வவுனியாவிற்கு ஏற்பட்ட சோதனை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் வவுனியா மாவட்டத்தின் பெயரினை வவ்நியா மற்றும் வவுனிh என  பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பாரிய அசோரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து வவுனியா நோக்கி புறப்படுவதற்கு கண்டி பேரூந்து நிலையம் சென்ற பொதுமகன் ஒருவர்  வவுனியா  செல்லும் பேரூந்தினை தேடியுள்ளார். பேரூந்து அவருக்கு முன்னாள் தரித்து நின்ற போதும் வவுனியாவின் பெயர் வவ்நியா என பெயரிடப்பட்டுள்ளதால் அவ் பேரூந்து சிங்கள இடத்திற்கு செல்லும் பேரூந்து என நினைத்து வவுனியா பேரூந்தினை தேடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கண்டி மற்றும் மஹியங்கனை சாலை பேரூந்திலே இவ்வாறு எழுத்துப்பிழைகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

You might also like