வவுனியா பம்பைமடுவில் தனியார் பேரூந்து நடத்துனரின் அடாவடி : மாணவி வைத்தியசாலையில்

வவுனியா பம்பைமடுவில் இன்று (09.07.2017) இரவு 6.30மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனருக்கும் பல்கலைக்கழக மாணவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு கைகலப்பாக மாறியதில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

இன்று இரவு 7.30மணியளவில் வவுனியாவிலிருந்து தனியார் பேருந்தில் பம்பைமடு பல்கலைக்கழகம் நோக்கிச் சென்ற 22வயதுடைய மாணவி பம்பைமடு பல்கலைக்கழத்தை அடைந்ததும் இறங்க முற்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு பேருந்து கட்டணமாக 20ரூபாவே அறவிடப்பட்டு வந்துள்ளது எனினும் குறித்த மாணவி 50ரூபாவினைக்கொடுத்து மிகுதி 30ரூபாவினைக் கேட்டுள்ளார். இதையடுத்து தனியார் பேருந்து நடத்துனர் 30ரூபா பெற்றுக்கொண்டு 20ரூபாவினைக் கொடுத்துள்ளார். இதையடுத்து குறித்த மாணவி 20ரூபாவே பேருந்து கட்டணமாக அறவிடப்படுவது என்று தெரிவித்து ஏன் 30ரூபா பெறப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து நடத்துனருக்கும் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி குறித்த மாணவியை நடத்துனர் பேருந்திலிருந்து வெளியே தள்ளியுள்ளார்.

இதனால் காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like