வவுனியா கணேசபுரம் மக்களின் நீண்டநாள் தேவையினை பூர்த்தி செய்த வடமாகாண சுகாதார அமைச்சர்

வவுனியா கணேசபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சினால் சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொகுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் (PSDG) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், வைத்திய அதிகாரி விடுதி என்பன வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் இன்று (10.07.2017) காலை 10.00மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

கணேசபுரம் பாடசாலை மாணவர்களின் வரவேற்று நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுதர்சன், கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபர் எஸ்.நந்தசேனா, வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் பத்மநாதன் சத்தியசீலன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான இ.சஜீவன், பா.சிந்துஜன், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

9 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையமும் 5.84மில்லியன் ரூபா செலவில் வைத்திய அதிகாரி விடுதியும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like