வேப்பங்குளம் சிறுவர் அன்பகம் தொடர்பான விஷேட குழுவின் அறிக்கை கொழும்பிற்கு அனுப்பி வைப்பு : அரசாங்க அதிபர்

வவுனியா வேப்பங்குளம் அன்பக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஞர் ஒன்றினை கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார அவர்கள்,

வேப்பங்குளம் அன்பகத்தில் கடந்த 29ம் திகதி மரணித்த சிறுமி தொடர்பாக பொலிஸாரும் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்ற நிலையில் எனது அலுவல உத்தியோகத்தர்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து தனி விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த விசாரணையில் பிள்ளை கல்வி கற்ற பாடசாலை அதிபர், பிள்ளைகள், பிள்ளையின் உறவினர்கள் மற்றும் அன்பக பிள்ளைகளின் வாக்குமூலம் அனைத்து பெறப்பட்டுள்ளது. அனைத்து விடயங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலமைக்காரியலயம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலமைக்காரியலயத்தின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வேப்பங்குளம் அன்பக பிள்ளைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் மேலதிக தகவல்கள் தற்போது வெளியீட முடியாது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

 

You might also like