வவுனியா செட்டிக்குளம் பாடசாலை மாணவி மீது அரசியல்வாதி தாக்குதல்

வவுனியா செட்டிக்குளம் பாடசாலை மாணவி மீது இன்று (12.07.2017) மதியம் 2.15மணியளவில் அரசியல்வாதியோருவர் தாக்கிய சம்பவமோன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

 வவுனியா செட்டிக்குளம் பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவி இன்று (12.07.2017) மதியம் 2.00மணிக்கு பாடசாலை முடிவடைந்த பின்னர் மெனிக்பாம் வீடு திரும்புவதற்காக செட்டிக்குளம் மத்திய பேரூந்து நிலையத்தில் நின்ற சமயத்தில் அவ்விடத்திற்கு வந்த அரசியல்வாதியோருவர் அனைவருக்கும் முன்பாக சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

 இதனையடுத்து அவ்விடத்தில் நின்ற முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து தடுத்து நிறுத்தியதுடன் குறித்த மாணவியை பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.எனினும்  குறித்த அரசியல்வாதி அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கையினை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

You might also like