வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு விழா

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு விழா இன்று (2017.07.13) காலை 9.30மணியளவில் பாடசாலையின் அதிபர் தா.அமிர்தலிங்கம் தலமையில் நடைபெற்றது

பாடசாலையின் 2017ம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் தர்மகரத்தா சாஸ்ரீ தேசமானிய வேலுப்பிள்ளை குணரட்னம் அவர்களினால் பாடசாலை மாணவர் விடுதி புனரமைக்கப்பட்டு இன்று பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தெ.கெங்காதரன், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.சுஜேன், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் நடனம், விவாத மேடை, பாடசாலை கீதம் இறுவட்டு வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.​

You might also like