வவுனியா கனேசபுரத்தில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா கணேசபுரம் கிழக்கு கிராமத்தில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2017) காலை 9.30மணிக்கு நடைபெற்றது.

அமைச்சர் அவர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வவுனியா கனேசபுரம் கிழக்கு கிராமத்தில் அமைக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கலினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் ப.பிரதீபன்,  கனேசபுரம் விநாயக வித்தியாலய அதிபர், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கிராம சேவையாளர்,  பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

0.5மில்லியன் செலவில் இவ் அறநெறி பாடசாலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like