தைத்திருநாளில் வன்னி மக்களின் அவல நிலை!

பொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நன் நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலைக்குள் வன்னி மாவட்ட விவசாயிகள் என மாகாண சபை உறுப்பினர் மயூரன் தெரிவித்தார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் இன்று(14) விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலைக்குள் வன்னியின் விவசாயப் பெருங்குடிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இருக்கின்ற வளத்தினைக் கொண்டு எளிமையான, ஆரவாரமற்ற பொங்கலை பொங்கி மகிழ்ந்திட வாழ்த்தி நிற்கின்றேன்.

ஏமாற்றங்கள் எங்களை சூழ்ந்து வரினும் புதிய ஆண்டில் மேலும் நம்பிக்கை வைத்து, தடைகள் தாண்டி முன்னோக்கி பயணிக்க திடசங்கற்பம் கொள்வோம். கடினமான பாதையின் பயணம் விடியலுடன் நிறைவு செய்திட நம்பிக்கை கொண்டு உழைத்திடுவோம். ஏமாற்றங்கள், சவால்கள், தடைகள் எமது துன்பியல் அனுபவங்களாகவும் வரலாறாகவும் கடந்து சென்றாலும் ஒற்றுமையுணர்வுடன் உழைத்திட்டால் ஓரடியேனும் கடந்து செல்ல முடியும்.

கட்சி, மத, பிரதேச வேறுபாடுகள் களைந்து அரசியல் உரிமைக்கான அவசியம் உணர்ந்து, ஓரணியாக நின்று ஓங்கி குரல் எழுப்ப இப்பொங்கல் தினத்தில் இறைவன் அனைவருக்கும் ஆத்ம பலத்தை வழங்கி அருள் பொழிய பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்

You might also like