கிளிநொச்சி வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு வசதி ஆரம்பித்து வைப்பு

கிளிநொச்சி வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த நீர் சுத்திகரிப்பு வசதியினை, தைப்பொங்கல் தினமான (சனிக்கிழமை) வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆரம்பித்துவைத்தார்.

மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் இந் நீர் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் 3 நோயாளர் விடுதிகளுக்கும் ஊழியர் ஓய்வறைக்கும் குறித்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலை வளாகத்தில் வளர்ப்பதற்கென மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like