வன்னியில் பால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

வன்னியில் பல கிராமங்களில் மாடுகளின் மேய்ச்சலுக்கு மேய்ச்சல் தரைகளை ஒதுக்கித் தரவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி, கோட்டைகட்டியகுளம், அம்பலபெருமாள், தட்டுவன்கொட்டி, பூநகரியின் உள்ளிட்ட பல கிராமங்களில் மாடுகளின் மேய்ச்சலுக்கான தரைகளை ஒதுக்கித் தரவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்ததுள்ளனர்.
எமது பிரதேசங்களில் மேய்ச்சல்தரைகள் இல்லை…(தெரிந்தும்..) குறித்த விடயத்தில் நிர்வாகங்கள் இதுவரை கரிசனை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
வன்னியில் கால்நடை வளர்ப்பு கணிசமான வருமானத்தை பலருக்கு ஏற்படுத்தித்தரும் இந்த நிலையில், இவ்வாறாக மேய்ச்சல்தரை இன்மை பிரச்சினையால் வன்னியில் பால்உற்பத்தயின் நிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.