பக்கச்சார்பாக செயற்படும் கிராம உத்தியோகத்தரை உடனடியாக மாற்றம் செய் : வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று 15.01.2017 காலை 8.30மணியளவில் தமது கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியிலுள்ள இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் புதிய நிர்வாகத்தினை பொதுமக்கள் முன்நிலையில் மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதி மக்களால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களை புறக்கணித்து செயற்படும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய், ஜந்து வருடம் கிராமத்தில் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் கிராமத்தில உண்மை செயற்பாட்டாளர்களை புறக்கணிப்பது ஏன், இரத்துச் செய் இரத்தச் செய் புதிய நிர்வாகத்தை இரத்துச் செய், வேண்டும் வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு நீதி வேண்டும். என பல்வேறு சுலோகங்களை  தாங்கியவாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக நிர்வாகம் தெரிவு செய்யப்படவில்லை, தற்போதைய நிர்வாகத்தினர் கிராமத்தின் தேவைகளை அறிந்து கிராமத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை கிராமசேவையாளர் தமக்கு வேண்டியவர்களை நிர்வாகத்தில் உள்ளாங்கி செயற்பட்டு வருகின்றார், பொதுக்கூட்டம் வைப்பதாகத் தெரிவித்து கிராம அபிவிருத்திச்சங்கத்தினை தெரிவு மேற்கொண்டுள்ளதாகவும் இதனை அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பதாகவும் தமது கிராமத்திலுள்ளவர்களை கிராம அபிவிருத்திச்சங்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தினை அப்பகுதி மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன்,  அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், புதிய நிர்வாகத்தெரிவினை மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் நாளை கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

You might also like