வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்ல உதவிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார்.

ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.

You might also like