வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்த விளையாட்டுக்கழகம் சிரமதானம்

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரண்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் சமூக ஆர்வலர்களும் இணைந்து வவுனியாவில் சிரமதானப்பணியினை முன்னெடுத்தனர்.

நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இறந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் வரும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு முழுநாள் சிரமதானத்தினை முன்னெடுத்த பிரண்ட்ஸ் விளையாட்டுக்கழகமானது குட்சட்வீதி, புகையிரத நிலைய வீதி என்பவற்றில் இச்சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like