வவுனியாவில் வெகு விமர்சையான கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு

வவுனியாவில் இன்று (17.07.2017) காலை 8.30 மணியளவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் வடமாகாணகல்வி பண்பாட்டலுவலக்கள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ் மணி அகளங்கள் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை பரிமாறப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதான அனுசரணையினை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  எஸ். ரவீந்திரன், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான  எஸ். சந்திரகுமார்  கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன்.  ஆர் கதிர்காமராஜர் ஆகியோரால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

 இந்நிகழ்வில் வ​. மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா .உதயராசா , பிரதம கணக்காளர் எஸ்.பாலகுமார் , திவிநெகும பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், விவசாயப்பணிப்பாளர் திருமதி ஈஸ்வரன், கணக்காளர் ரஞ்சித்குமார் , நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சாந்தி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு இ. நித்தியானந்தன் , மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் ,தமிழ் விருட்சம் தலைவர் சந்திரகுமார் கண்ணன் செயலாளர் மாணிக்கம் ஜெகன் , வர்த்தகசங்கத்தலைவர் ரி.இராஜலிங்கம் , முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன் ஆட்டோ உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் சேனாதிராசா மற்றும் பல சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் விபுலானந்தாக்கல்லூரி ,சி.சி.ரி.எம்.எஸ் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .

You might also like