வடக்கு மாகாணசபையை புறக்கணித்து திறக்கப்படும் பேரூந்து நிலையத்தை புறக்கணிப்போம் : மயூரன்

வவுனியாவில் நாளை (16.01.2016) திறந்து வைக்கப்படவுள்ள புதிய பேரூந்து நிலையத்திறப்பு விழா நிகழ்வினை மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டுமேன வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நாளை மத்திய அமைச்சர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கடவுள்ள புதிய மத்திய பேரூந்து நிலையத்திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் என பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரையும் புறக்கணித்து இப்பேரூந்து நிலையம் திறக்கப்பட உள்ளதையிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து  நாளை திறந்துவைக்கப்படவுள்ள பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவினை புறக்கணிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like