வவுனியாவில் வயோதிபரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்த இளைஞன் கைது

வவுனியாவில் நேற்று (16.07.2017) இரவு 9.45மணியளவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தியதில் வயோதிபர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வவுனியா நேரியகுளம் பகுதியில் வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபர் மீது தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த வயோதிபரான சிமைல் தாம்டீன் 64வயது மாங்குளம் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் மீது அதே பகுதியைச் சேர்ந்த 18வயதுடைய இளைஞனே தாக்குதல் நடாத்தியதாகவும் தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like