வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு

வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் சிறுவர் இல்லத்தில் இன்று ​(​17​.07.2017)​
மாலை 4.00 மணியளவில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்  வீ. பிரதீபன், கோவில்குளம் சிவன்கோவில் செயலாளரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளக செயலாளருமான ஆ. நவரட்ணராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன்) தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலரும் அருளக சிறுவர் இல்ல உறுப்பினருமான  ஆர். சூரியகுமார், மற்றும் அருளக நிர்வாக உத்தியோகத்தர், என பலரும் கலந்து கொண்டதுடன் கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும், இசை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.

You might also like